/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/விடுப்பு எடுக்காமல் வந்த மாணவ, மாணவியருக்கு பரிசுவிடுப்பு எடுக்காமல் வந்த மாணவ, மாணவியருக்கு பரிசு
விடுப்பு எடுக்காமல் வந்த மாணவ, மாணவியருக்கு பரிசு
விடுப்பு எடுக்காமல் வந்த மாணவ, மாணவியருக்கு பரிசு
விடுப்பு எடுக்காமல் வந்த மாணவ, மாணவியருக்கு பரிசு
ADDED : பிப் 10, 2024 07:58 AM
காவேரிப்பட்டணம் : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த ஜெகதாப் அரசு உயர் நிலைப்பள்ளியில் நேற்று ஆண்டுவிழா நடந்தது.
தலைமை ஆசிரியர் நந்தகுமார் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் உத்திரகுமார் வரவேற்றார். தொடர்ந்து பள்ளி மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆண்டு முழுவதும் விடுப்பு எடுக்காமல் வந்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வட்டார ஆசிரியர் பயிற்றுனர் காவேரி மற்றும் பஞ்., தலைவர் கன்னியம்மாள் ராமமூர்த்தி வழங்கினார். ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.