மூணாறு தீ விபத்தில் ஏழு வீடுகள் சேதம்
மூணாறு தீ விபத்தில் ஏழு வீடுகள் சேதம்
மூணாறு தீ விபத்தில் ஏழு வீடுகள் சேதம்
ADDED : பிப் 10, 2024 05:50 AM

மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான பெரியவாரை எஸ்டேட் சோலமலை டிவிஷனில் நேற்றுமுன்தினம்நள்ளிரவில் ஏற்பட்டதீ விபத்தில் ஏழு வீடுகள் சேதமாகின.
அங்கு தொழிலாளர்கள் வசிக்கும் 10 வரிசை வீடுகளைக் கொண்ட குடியிருப்பில் நேற்று நள்ளிரவில் 2:15 மணிக்கு மீனாட்சி வீட்டில்தீப்பற்றியது.குடியிருப்பில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர்.புகை மண்டலம் ஏற்பட்டதைசுவாசித்த சிலர் சுதாரித்துஅடுத்தடுத்தவீடுகளில் இருந்தவர்களை வெளியேற்றினர். தொழிலாளர்களான கவுரி, பஞ்சவர்ணம், மீனாட்சி, ராதிகா, பழனிசாமி மற்றும் பழனியின் இரண்டு வீடுகள் உள்பட ஏழு வீடுகள் முற்றிலுமாக எரிந்து தங்க நகைகள், பணம் உள்பட வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந்தன. தொழிலாளர்கள், இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் மூன்று வீடுகள் தப்பின.
வாக்குவாதம்: மூணாறு தீயணைப்பு துறையினர் அதிகாலை 3:30 மணிக்கு வந்தபோதும் பழுதடைந்த மோட்டாரால் தீயை அணைக்க இயலவில்லை. அதன் பிறகு வந்த வாகனத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இறுதியில் அதிகாலை 5:00 மணிக்கு அடிமாலியில் இருந்து தீயணைப்பு வாகனம் வந்தது.
இரண்டு வீடுகளுடன் தீயை கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய நிலையில் தீயணைப்புதுறை அலட்சியத்தால் ஏழு வீடுகள் எரிந்தன. அதனால் தொழிலாளர்களுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
காயம்: தீயை அணைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டபோது திடிரென காஸ் சிலிண்டர் வெடித்துசிதறியது.
அதனை கண்டு அதிர்ச்சியில் இருளில் ஓடியபோது கீழே விழுந்து கருப்பசாமி 43, பீட்டர் 45, அஜி 32, மாரியம்மாள் 48, தனலட்சுமி 50, அமராவதி 45,உள்பட 15 பேர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். மின்கசிவு மூலம்தீப்பற்றியதாக தெரியவந்தது.
இது போன்று கடலார் எஸ்டேட் வெஸ்ட் டிவிஷனில் ஜன.11 இரவில் தொழிலாளர்கள் குடியிருப்பில் தீப்பற்றி எட்டு வீடுகள் தீக்கிரையாகின.