/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வி.ஆர்.டி., அரசு மகளிர் பள்ளியில் ஆண்டு விழாவி.ஆர்.டி., அரசு மகளிர் பள்ளியில் ஆண்டு விழா
வி.ஆர்.டி., அரசு மகளிர் பள்ளியில் ஆண்டு விழா
வி.ஆர்.டி., அரசு மகளிர் பள்ளியில் ஆண்டு விழா
வி.ஆர்.டி., அரசு மகளிர் பள்ளியில் ஆண்டு விழா
ADDED : பிப் 09, 2024 11:31 PM

ஆனைமலை;ஆனைமலை வி.ஆர்.டி., அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ஆண்டு விழா நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் சுதா வரவேற்றார். ஆனைமலை முன்னாள் பேரூராட்சி தலைவர் சாந்தலிங்ககுமார், பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி, துணைத்தலைவர் ஜாபர்அலி முன்னிலை வகித்தனர்.
கோவை கவிஞர் சுடர்விழி பேசினார். பட்டதாரி ஆசிரியர் சகிலாபேகம், 2023 - 24ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை படித்தார்.
மாநில அளவில் கபடி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர், கிளாட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பொதுத்தேர்வில் முதல் இரண்டு இடம் பிடித்த மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் சபுராபேகம் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். பள்ளி ஆசிரியர் ஜெயக்குமார், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பட்டதாரி ஆசிரியர் லோகநாயகி நன்றி கூறினார்.