அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., - பா.ம.க.,?
அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., - பா.ம.க.,?
அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., - பா.ம.க.,?

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நன்றிக்கடன்
பா.ம.க., தரப்புடன் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்தே, சமீபத்தில், திண்டிவனம் தைலாபுரத்தில் ராமதாஸ் - சி.வி.சண்முகம் ஆகிய இருவரும் சந்தித்துப் பேசினர்.கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், ஏழு லோக்சபா தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியும், பா.ம.க.,வுக்கு வழங்கப்பட்டன. தேர்தலில் தோல்வி அடைந்த போதிலும், கூட்டணி ஒப்பந்தப்படி, அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியை, அ.தி.மு.க., வழங்கியது.
ஆதங்கம்
கடந்த 10 ஆண்டுகள் பா.ஜ., ஆட்சியில், அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி தராமல் இருந்த அதிருப்தியை விட, அண்ணாமலையின் அபார வளர்ச்சி பா.ம.க.,வை பாதிக்கும் என்பதால், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க, ராமதாஸ் விரும்பவில்லை.அதேபோல், கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., நான்கு தொகுதிகளில் போட்டியிட்டது.தோற்றதும், அக்கட்சி துணை பொதுச்செயலர் சுதீஷுக்கு, பா.ஜ.,விடம் ராஜ்யசபா எம்.பி., பதவி கேட்கப்பட்டது; ஆனால், தரப்படவில்லை.


