/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/2 ஏரிக்கு இடையே சிறுபாலத்தில் ஷட்டர் அமைக்க கோரிக்கை2 ஏரிக்கு இடையே சிறுபாலத்தில் ஷட்டர் அமைக்க கோரிக்கை
2 ஏரிக்கு இடையே சிறுபாலத்தில் ஷட்டர் அமைக்க கோரிக்கை
2 ஏரிக்கு இடையே சிறுபாலத்தில் ஷட்டர் அமைக்க கோரிக்கை
2 ஏரிக்கு இடையே சிறுபாலத்தில் ஷட்டர் அமைக்க கோரிக்கை
ADDED : பிப் 09, 2024 11:01 PM

குன்றத்துார்:குன்றத்துார் தாலுகா, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரி, சித்தேரி என, இரண்டு ஏரிகள் உள்ளன.
இந்த இரண்டு ஏரி நீரை பயன்படுத்தி, சோமங்கலம், புதுச்சேரி கிராமங்களில், 600 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த ஏரிகளுக்கு இடையே, சாலையின் குறுக்கே தண்ணீர் செல்ல சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது.
மழைக்காலத்தில் நீர்வரத்திற்கு ஏற்ப, ஒரு ஏரியில் இருந்து மற்றொரு ஏரிக்கு, இந்த பாலத்தின் கீழ் உள்ள கால்வாயில் தண்ணீர் செல்லும்.
இரு ஏரிகள் நிரம்பியதும், அழுத்தம் காரணமாக சித்தேரி ஏரியில் இருந்து பெரிய ஏரிக்கு இந்த கால்வாய் வாயிலாக, உபரி நீர் வெளியேறி வீணாகிறது. மேலும், பெரிய ஏரியின் கலங்கள் வழியே தண்ணீர் வெளியேறி வீணாகிறது.
எனவே, ஏரியில் தண்ணீரை தடுத்து நிறுத்தி, தேவைக்கு ஏற்ப தண்ணீரை திறந்து, மூடும் வகையில் இந்த பாலத்தின் கீழ் உள்ள கால்வாயில் ஷட்டர் அமைக்க வேண்டும் என, இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.