ADDED : பிப் 10, 2024 12:58 AM

கோபம் என் இயல்பு!
பார்லிமென்டில் ஏன் இவ்வளவு கோபப்படுகிறீர்கள் என பலர் என்னிடம் கேட்கின்றனர். அது என் இயல்பு. எனக்கு உடன்படாத விஷயம் நடந்தால் கோபப்படுவேன். என் நடவடிக்கைகள் யாரையாவது காயப்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
ஜெயா பச்சன்
ராஜ்யசபா எம்.பி., - சமாஜ்வாதி
மதவாத நாடாக்க முயற்சி!
மதச்சார்பற்ற நாட்டை மதவாத நாடாக மாற்ற சிலர் முயற்சிக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக அரசு பதவிகளில் இருக்கும் சிலர் இந்த முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
பினராயி விஜயன்
கேரள முதல்வர்,
மார்க்சிஸ்ட்
கண் மூடியிருந்த காங்கிரஸ்!
முந்தைய காங்கிரஸ் அரசு, ஊழல் நடப்பது தெரிந்தும் கண் மூடியிருந்தது. 1947 முதல் 1990 வரையிலான காங்கிரசின் ஆட்சி, 'லைசென்ஸ்' ராஜ்ஜியம் என்றால், 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சி, ஊழல் ராஜ்ஜியம் என கூறலாம்.
நிஷிகாந்த் துபே
லோக்சபா எம்.பி., -- பா.ஜ.,