/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.71 கோடி வங்கி கடனுதவிமகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.71 கோடி வங்கி கடனுதவி
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.71 கோடி வங்கி கடனுதவி
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.71 கோடி வங்கி கடனுதவி
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.71 கோடி வங்கி கடனுதவி
ADDED : பிப் 09, 2024 11:15 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் 513 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 71 கோடி ரூபாய் மதிப்பில் வங்கி கடன் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். உதயசூரியன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், சுய உதவிக் குழுக்கள் தொழில் துவங்கவும், பொருட்களை உற்பத்தி செய்யவும், உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வங்கி கடனுதவி வழங்கப்பட்டது.
அதன்படி மாவட்டத்தில் 477 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 35 கோடி 35 லட்சம் ரூபாய் நேரடி கடன், 36 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு 34 கோடியே 67 லட்சம் ரூபாய் வங்கி பெருங்கடன் என மொத்தம் 513 சுய உதவி குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.71 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டது.
தொடர்ந்து மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய தியாகதுருகம், சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய வட்டத்திற்கு 3 'மதி எக்ஸ்பிரஸ்' வாகன அங்காடி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சுந்தராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், உதவி திட்ட அலுவலர்கள் ஆண்டாள், ராஜா, சம்பத்குமார், அருண்குமார், அலுவலக கண்காணிப்பாளர் ஆறுமுகம், அரசு அலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.