பிரியங்காவுக்கு பிரசாரம் செய்கிறார் மம்தா ?
பிரியங்காவுக்கு பிரசாரம் செய்கிறார் மம்தா ?
பிரியங்காவுக்கு பிரசாரம் செய்கிறார் மம்தா ?
ADDED : ஜூன் 21, 2024 07:06 PM

புதுடில்லி: கேரளா வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் காங்., வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரியங்காவை ஆதரித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த பார்லிமென்ட் லோக்சபா தேர்தலில் இத்தொகுதியில் உ.பி. ரேபரேலியிலும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்ட ராகுல், உபி. ரேபரேலியில் வெற்றி பெற்றதால் வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இத்தொகுதியை பிரியங்காவிற்கு விட்டு கொடுத்தார்.இத்தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
இன்று(21.06.2024) வெளியான தகவலில், வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் காங்., வேட்பாளராக களம் இறங்க உள்ள பிரியங்காவை ஆதரித்து பிரசாரம் செய்ய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக காங்., மூத்த தலைவர்கள் சிலர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.