ஸ்ரீநகர் மருத்துவமனையில் தமிழக பெண்ணின் உடல்
ஸ்ரீநகர் மருத்துவமனையில் தமிழக பெண்ணின் உடல்
ஸ்ரீநகர் மருத்துவமனையில் தமிழக பெண்ணின் உடல்
ADDED : ஜூலை 17, 2011 01:00 AM
ஸ்ரீநகர் : காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள எஸ்.எம்.எச்.எஸ்., மருத்துவமனை வளாகத்தில், பெண் ஒருவரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
இதனால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் கிடந்த பெண்ணின் சடலத்தை, உள்ளூர் மக்கள் ஏராளமானோர் பார்த்து சென்றனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பெண்ணின் சடலத்தை மீட்டு, அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், இறந்த பெண், தமிழகத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகள் சபரியம்மா என, தெரிய வந்துள்ளது. எனினும், அவரது இறப்புக்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.