/உள்ளூர் செய்திகள்/தேனி/பெரியாறு அணை பகுதியில் 'ட்ரோன் கேமரா சர்வே'பெரியாறு அணை பகுதியில் 'ட்ரோன் கேமரா சர்வே'
பெரியாறு அணை பகுதியில் 'ட்ரோன் கேமரா சர்வே'
பெரியாறு அணை பகுதியில் 'ட்ரோன் கேமரா சர்வே'
பெரியாறு அணை பகுதியில் 'ட்ரோன் கேமரா சர்வே'
ADDED : பிப் 10, 2024 01:04 AM
கூடலுார்:தேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணியரின் வாகனங்கள், படகு நிறுத்தப் பகுதியை ஒட்டி நிறுத்தப்பட்டன. புலிகள் சரணாலய பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி, குமுளி அருகே உள்ள ஆனைவச்சால் பகுதிக்கு, 2014ல் கார் பார்க்கிங் தற்காலிகமாக மாற்றப்பட்டது.
அணை நீர்த்தேக்கப் பகுதியில் பார்க்கிங் பகுதி அமைக்கப்பட்டதற்கு, தமிழக விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழக நீர்வளத்துறையினர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கிற்காக ஆனைவச்சால் கார் பார்க்கிங் பகுதியை சர்வே செய்து அறிக்கை அளிக்க, இந்திய நில அளவியல் துறைக்கு, 2023 டிச., 23ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, சில நாட்களுக்கு முன், மெயின் அணை, தேக்கடி ஷட்டர், ஆனைவச்சால் ஆகிய பகுதிகளில் ட்ரோன் கேமரா பறக்க விடப்பட்டு சர்வே செய்யப்பட்டது.
ஓரிரு நாட்களில் இப்பணியை முடித்து, இதற்கான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.