/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலூரில் பண்பாட்டு பாசறை விழா: புகைப்பட கண்காட்சி துவக்கி வைப்புகடலூரில் பண்பாட்டு பாசறை விழா: புகைப்பட கண்காட்சி துவக்கி வைப்பு
கடலூரில் பண்பாட்டு பாசறை விழா: புகைப்பட கண்காட்சி துவக்கி வைப்பு
கடலூரில் பண்பாட்டு பாசறை விழா: புகைப்பட கண்காட்சி துவக்கி வைப்பு
கடலூரில் பண்பாட்டு பாசறை விழா: புகைப்பட கண்காட்சி துவக்கி வைப்பு
ADDED : பிப் 09, 2024 11:37 PM

கடலுார்: கடலுாரில் பண்பாட்டு பாசறை விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.
திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி அரங்கில் கருணாநிதி நுாற்றாண்டு விழாவின் அங்கமாக பண்பாட்டு பாசறை விழா நடந்தது. விழாவிற்கு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். ஐயப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளரான சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கலைஞர்- 100 புகைப்பட கண்காட்சியை துவக்கிவைத்து, பார்வையிட்டார்.காலை 11 மணியளவில் திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்றம் நடந்தது. பிற்பகல் 3 மணிக்கு கலைமாமணி ஜாகிர் உசேன் குழுவினரின் நாட்டிய நாடகம் நடந்தது. கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ மாணவியர்களுக்கு அமைச்சர்கள் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.
இதில் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் விஜய சுந்தரம், துணைச் செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, அகஸ்டின் பிரபாகரன், மண்டல குழு தலைவர் பிரசன்னா, இளையராஜா, சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் விஜயலட்சுமி செந்தில், கவிதா ரகுராம், பார்வதி லெனின், பகுதி செயலாளர் சலீம், மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி கார்த்திக் மற்றும் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.