ADDED : பிப் 10, 2024 04:48 AM
சிவகங்கை: மாவட்டத்தில் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் இன்று (பிப்.,10) ரேஷன் குறைதீர் முகாம் நடைபெறும்.
ரேஷன் கார்டுதாரர்கள் இன்று காலை 10:00 மணிக்கு துவங்கும் குறைதீர் முகாமில், ரேஷன் கடைகள் மீதான குறைகள், ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் போன்று அனைத்து குறைகள் மீதும் தீர்வு காணலாம். அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடக்கும் இக்குறைதீர் கூட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.