சிவன்மலை கோவிலில் அமாவாசை வழிபாடு
காங்கேயம்: தை அமாவாசையை ஒட்டி, காங்கேயம் பகுதி கோவில்களில் நேற்று, பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தை அமாவாசை முருகனுக்கு உகந்த தினம் என்பதால், சிவன்மலை முருகன் கோவிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு கோமாதா பூஜை, சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. உச்சிகால பூஜையை தொடர்ந்து, தம்பதி சமேத சுப்ரமணியசுவாமி, அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் மலையை சுற்றி வலம் வந்தார். மாலை வரை கோவிலுக்கு, பக்தர்கள் வந்தவண்ணம் இருந்தனர். மதியம் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
கொசு ஒழிப்பில் ஈடுபட்ட பெண்களுக்கு புடவை பரிசு
காங்கேயம்: வெள்ளகோவில் நகராட்சியில், 21வார்டுகள் உள்ளன. இவற்றில் ஒவ்வொரு வீட்டுக்கும், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர் சென்று, டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர். வீட்டின் முன்புறம் உள்ள டயர், தேங்காய் தொட்டி, ஆட்டுக்கல் ஆகியவற்றில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 276 பேர் தேர்வு
ஈரோடு: ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. இதில், 52 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. மொத்தம், 24 மாற்றுத்திறனாளிகள் உட்பட, 721 பேர் பங்கேற்றனர். இதில், 425 பேர் ஆண்கள், 296 பேர் பெண்கள். இவர்களில், 88 பெண்கள், 188 ஆண்கள் என, 276 பேர் பல்வேறு பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டு, பணியாணை பெற்றனர். இவர்களில் ஐந்து பேர் மாற்றுத்திறனாளிகளாவர்.