/உள்ளூர் செய்திகள்/திருச்சி/செங்கல் சூளை கொத்தடிமைகள் மூவர் மீட்புசெங்கல் சூளை கொத்தடிமைகள் மூவர் மீட்பு
செங்கல் சூளை கொத்தடிமைகள் மூவர் மீட்பு
செங்கல் சூளை கொத்தடிமைகள் மூவர் மீட்பு
செங்கல் சூளை கொத்தடிமைகள் மூவர் மீட்பு
ADDED : பிப் 10, 2024 01:06 AM
திருச்சி:திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஆங்கரையில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது.
இங்கு கொத்தடிமைகளாக சிலர் வேலை பார்ப்பதாக புகார்கள் சென்றன.
அதன் அடிப்படையில் நேற்று முன்தினம், தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையில், செங்கல் சூளையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அங்கு, அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாதுரை, 65, அவரது மனைவி ராணி, 55, சாமிக்கண்ணு, 72, ஆகியோர், ஒரு லட்சம் ரூபாய்க்கு, கடந்த, ஆறு மாதங்களாக கொத்தடிமைகளாக வேலை பார்த்தது தெரிந்தது.
இதையடுத்து அவர்களை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மீட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஆங்கரை வி.ஏ.ஓ., குணசேகரன், லால்குடி போலீசில் அளித்த புகாரின் படி, போலீசார் வழக்கு பதிந்து, செங்கல் சூளை உரிமையாளர் நடராஜனை தேடி வருகின்றனர்.