ADDED : பிப் 10, 2024 05:35 AM
வேடசந்துார்: வேடசந்துார் காக்காத்தோப்பூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் கோபிகா 16.
வேடசந்துார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். நேற்று காலை பள்ளிக்கு செல்வதற்காக ஆத்துமேடு குடகனாறு பாலத்தின் மீது நடந்து சென்றார். எதிரே வந்த தெரு நாய் மாணவியை கடித்து குதறியது. கையில் ரத்தம் கொட்டியது. அருகில் இருந்தவர்கள் கோபிகாவை மீட்டு வேடசந்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வேடசந்துார் நகர் பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தெரு நாய்களை பிடித்த மலைப்பகுதியில் விட்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.