ADDED : பிப் 09, 2024 08:18 PM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த நாககுப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது ஊக்காத்தம்மன் கோவில். அதே கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவர் பூசாரியாக உள்ளார்.
சமீபத்தில் இந்த கோவிலின் உண்டியல் திருடு போனது. திருட்டில் ஈடுபட்டது அதே கிராமத்தைச் சேர்ந்த தனசேகர் தான் என அப்பகுதிவாசிகள் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரம் அடைந்த தனசேகரின் மகன் ஜெயராமன், தன் தந்தை மீது பழி சுமத்தியது பூசாரி மணிதான் எனக் கருதி, அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது குறுக்கிட்ட மணியின் மனைவி ஜமுனாவையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.