/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரூ.1.16 கோடியில் சாலை பணி; சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைப்புரூ.1.16 கோடியில் சாலை பணி; சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ.1.16 கோடியில் சாலை பணி; சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ.1.16 கோடியில் சாலை பணி; சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ.1.16 கோடியில் சாலை பணி; சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : பிப் 10, 2024 06:18 AM

வில்லியனுார் : கொம்பாக்கத்தில் இரு இடங்களில் கழிவுநீர் வாய்க்கால் வசதியுடன் தார் சாலை அமைக்கும் பணியை எதிர்க்கட்சித் தலைவர் சிவா துவக்கி வைத்தார்.
புதுச்சேரி நகராட்சி வார்டுக்கு உட்பட்ட கொம்பாக்கம், குப்பம்பேட் மற்றும் சிவகிரி நகர் பகுதியில் பொதுப்பணித்துறை மத்திய கோட்டம் சார்பில், ரூ.1:16 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய கழிவுநீர் வாய்க்கால் வசதியுடன் தார் சாலை அமைப்பதற்கான பணியை எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து, துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் மத்திய கோட்ட செயற்பொறியாளர் சீனு திருஞானம், உதவிப் பொறியாளர் பார்த்தசாரதி, இளநிலைப் பொறியாளர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.