ADDED : பிப் 10, 2024 12:46 AM
கோவை;கணபதி அருகே ஐந்து மாதங்களாக தேங்கி நின்ற கழிவு நீர், நேற்று கழிவுநீர் உறிஞ்சும் லாரி வாயிலாக அகற்றப்பட்டது.
மாநகராட்சி, 31வது வார்டு கணபதி, ராஜீவ் காந்தி சாலையில் மழைநீர் வடிகால் கட்டும் பணி நடந்து வருகிறது. கடந்த ஐந்து மாத காலமாக இப்பணி ஆமை வேகத்தில் நடப்பதுடன், தேங்கிய கழிவு நீரால் கொசு உற்பத்தியாகி நோய் பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக, நமது நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து, கழிவு நீர் உறிஞ்சும் லாரி வாயிலாக, கழிவு நீர் அகற்றப்பட்டது. அப்பகுதியில் ஏற்பட்டிருந்த குழாய் உடைப்பையும், மாநகராட்சி பணியாளர்கள் சரி செய்தனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.