Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/வருகிறார் ராகுல்... விலகினார் கோலி * இந்திய அணி அறிவிப்பு

வருகிறார் ராகுல்... விலகினார் கோலி * இந்திய அணி அறிவிப்பு

வருகிறார் ராகுல்... விலகினார் கோலி * இந்திய அணி அறிவிப்பு

வருகிறார் ராகுல்... விலகினார் கோலி * இந்திய அணி அறிவிப்பு

ADDED : பிப் 10, 2024 10:40 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார் கோலி. காயத்தில் இருந்து மீண்ட ராகுல் அணிக்கு திரும்புகிறார். ஸ்ரேயாஸ் நீக்கப்பட்டார். ஆகாஷ் தீப் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் சம நிலையில் உள்ளது.

மூன்றாவது டெஸ்ட் பிப். 15ல் ராஜ்கோட்டில் துவங்க உள்ளது. 4, 5 வது டெஸ்ட் ராஞ்சி (பிப். 23-27), தர்மசாலாவில் (மார்ச் 7-11) நடக்கவுள்ளது. இதற்கான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

கோலி விலகல்



முதல் இரு டெஸ்டில் பங்கேற்காத 'சீனியர்' கோலி, அடுத்த 3 டெஸ்டில் இருந்தும் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார்.

கடந்த 2011ல், வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான கிங்ஸ்டன் டெஸ்டில் அறிமுகமான இவர், ஒரு டெஸ்ட் தொடரில் முழுமையாக விலகுவது இது தான் முதன் முறை.

முதல் டெஸ்டில் சிறப்பாக செயல்பட்ட ராகுல் (86 ரன்), ஜடேஜா (87) காயத்தால் 2வது டெஸ்டில் விலகினர்.

தற்போது மீண்டும் அணிக்கு திரும்பினர். போதிய உடற்தகுதி இருந்தால் மட்டுமே போட்டியில் பங்கேற்பர்

ஸ்ரேயாஸ் நீக்கம்



முதல் இரு டெஸ்டில் ஏமாற்றினார் ஸ்ரேயாஸ் ((35, 13, 27, 29 ரன்). 'ஷார்ட் பிட்ச்' பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் திணறிய இவர், நீக்கப்பட்டார். முதுகு வலி, தொடை காயத்தால் அவதிப்படுகிறார். இவரது காயத்தின் தன்மை குறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.

ஆகாஷ் வாய்ப்பு



முதல் தரம், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட பெங்கால் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப், அறிமுக வீரராக சேர்க்கப்பட்டார்.

அவேஷ் கான், சவுரப் குமார் விடுவிக்கப்பட்டனர். முகமது சிராஜ் அணிக்கு திரும்பினார்.

அணி விபரம்



ரோகித் சர்மா (கேப்டன்), பும்ரா (துணைக் கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ராகுல், ரஜத் படிதர், சர்பராஸ் கான், துருவ் ஜோரெல், பரத், அஷ்வின், ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.

எங்கே சென்றார்



இந்திய வீரர் கோலி தனிப்பட்ட விஷயங்களுக்காக வெளிநாட்டில் உள்ளார். எங்கு சென்றார் என தெரிவிக்கப்படவில்லை.

பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''இங்கிலாந்து தொடரில் கோலி பங்கேற்க மாட்டார் எனத் தெரியும். குடும்ப கடமைகளை நிறைவேற்றட்டும். மீண்டும் விளையாட தயாராக இருக்கும் போது அணிக்கு திரும்பட்டும்,''என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us