சென்னையில் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு
சென்னையில் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு
சென்னையில் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு
ADDED : பிப் 10, 2024 12:16 AM
அண்ணாமலை, ராமேஸ்வரம் துவங்கி சென்னை வரை, பிரசார பாத யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். நாளை, சென்னையில் யாத்திரையை நடத்த இருந்தார். இதில், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா பங்கேற்கிறார் என, அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி, சென்னையில், வாலாஜா சாலை, நியூ ஆவடி சாலையில் பாத யாத்திரை மேற்கொள்ள அனுமதி கோரி, பா.ஜ., நிர்வாகிகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இரண்டு முறை மனு அளித்தனர். இதற்கு பதில் அளிப்பதில் போலீசார் இழுத்தடித்து வந்தனர்.
நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதை காரணமாக கூறி, அண்ணாமலை மற்றும் நட்டா பங்கேற்க இருந்த பாதயாத்திரைக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். ஆனால், தங்கசாலை, பூந்தமல்லி சாலையில், ஷெனாய் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில், ஏதேனும் ஒன்றில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்துள்ளனர்.