/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தை அமாவாசை: குண்டாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்தை அமாவாசை: குண்டாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசை: குண்டாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசை: குண்டாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசை: குண்டாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ADDED : பிப் 10, 2024 04:12 AM

திருச்சழி: திருச்சுழி குண்டாற்றில் தை அமாவாசை முன்னிட்டு மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கோயிலில் வழிபாடு செய்தனர்.
திருச்சுழி காசி, ராமேஸ்வரம் புண்ணிய ஸ்தலங்களுக்கு ஈடானது. 14 பாண்டிய ஸ்தலங்களில் 10வது ஸ்தலமாக திருச்சுழி உள்ளது.
இதனால் ஒவ்வொரு மாதமும் அமாவாசையை முன்னிட்டு திருச்சுழியில் உள்ள குண்டாற்றில் தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து விட்டு திருமேனிநாதர் கோயிலில் வழிபாடு செய்வது வழக்கம்.
நேற்று தை அமாவாசையை முன்னிட்டு காலை 6:00 மணிக்கே வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் குண்டாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
பின்னர் கோவிலுக்கு வந்து மோட்ச தீபம் ஏற்றி வைத்து தரிசனம் செய்தனர். -