'தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு 2026'
'தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு 2026'
'தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு 2026'
ADDED : ஜூன் 15, 2024 07:15 AM

ஈரோடு : ''தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு 2026 ஆண்டு தேர்தல்'' என்று அக்கட்சியின் பொது செயலர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
ஈரோடு, வீரப்பன் சத்திரத்தில், அக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற புஸ்ஸி ஆனந்த் அளித்த பேட்டி: நாம் தமிழர் கட்சியுடன், தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்புள்ளதா என்பது குறித்து, தலைவர் விஜய் தான் அறிவிப்பார். தமிழக வெற்றிக்கழகத்தில் லட்சக்கணக்கானோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
கடந்த, 30 ஆண்டுகளாக விஜய் ரசிகர்கள் மக்கள் பணி செய்து வருகின்றனர். இது தற்போது தமிழக வெற்றிக்கழகமாக மாறியுள்ளது. எங்களின் இலக்கு, 2026 தேர்தல் தான். எங்கள் சேவைக்கான பலன் 2026ல் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.