சிரியா மீது பொருளாதார தடை : பிரான்ஸ் அதிபர் வலியுறுத்தல்
சிரியா மீது பொருளாதார தடை : பிரான்ஸ் அதிபர் வலியுறுத்தல்
சிரியா மீது பொருளாதார தடை : பிரான்ஸ் அதிபர் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 17, 2011 01:18 AM
பாரீஸ் : 'கிளர்ச்சியாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும், சிரியா மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்' என, பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி வலியுறுத்தியுள்ளார்.
சிரியா நாட்டின் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக, மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அரசை எதிர்ப்பவர்கள் மீது, சிரியா ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதைக் கண்டித்து, பாரீசில், 'டிவி' ஒன்றுக்கு பேட்டியளித்த பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, ''சிரியா அதிபரின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது. மக்கள் மீது அரசு முரட்டுத்தனமாக நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. எனவே, சிரியா மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்' என்றார். அத்துடன், 'சிரியா நாட்டின் அதிபராக நீடிக்கும் தகுதியை பஷர் அல் அசாத், சட்டப்பட்டி இழந்துவிட்டார்' என்று ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றவும் பிரான்ஸ் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.