இந்திய மாணவி பலி: போலீஸ் அதிகாரி 'டிஸ்மிஸ்'
இந்திய மாணவி பலி: போலீஸ் அதிகாரி 'டிஸ்மிஸ்'
இந்திய மாணவி பலி: போலீஸ் அதிகாரி 'டிஸ்மிஸ்'
ADDED : ஜன 08, 2025 03:03 AM

வாஷிங்டன்: அமெரிக்காவில் போலீஸ் அதிகாரி வேகமாக ஓட்டிய கார் மோதியதில், இந்திய மாணவி உயிரிழந்த விவகாரத்தில், அந்த போலீஸ் அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் என்ற நகரில், 2023 ஜன., 23ல், கெவின் டேவ் என்ற போலீஸ் அதிகாரி ஓட்டிச் சென்ற ரோந்து வாகனம் மோதி, ஆந்திராவைச் சேர்ந்த ஜாஹ்னவி கந்துலா, 23, என்ற மாணவி உயிரிழந்தார்.
விதிகளை மீறி, 119 கி.மீ., வேகத்தில் ரோந்து காரை அவர் இயக்கியது தெரிய வந்தது. மாணவி ஜாஹ்னவி கந்துலா மீது கார் மோதிய போது, போலீஸ் அதிகாரி கெவின் டேவ் நக்கலாக சிரித்துக்கொண்டே கிண்டலடித்தது, ரோந்து காரில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவானது. இதையடுத்து, சில மாதங்களுக்கு முன் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் கடமை தவறியதாகவும், காவல் துறையின் கொள்கைகளை மீறியதாகவும் கூறி, பணியில் இருந்து கெவின் டேவை நீக்கி சியாட்டில் போலீஸ் நேற்று உத்தரவிட்டது.