Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கழுத்தை அறுத்து பெண் எரித்துக்கொலை : பண்ருட்டி அருகே கொடூரம்

கழுத்தை அறுத்து பெண் எரித்துக்கொலை : பண்ருட்டி அருகே கொடூரம்

கழுத்தை அறுத்து பெண் எரித்துக்கொலை : பண்ருட்டி அருகே கொடூரம்

கழுத்தை அறுத்து பெண் எரித்துக்கொலை : பண்ருட்டி அருகே கொடூரம்

ADDED : ஜூலை 17, 2011 01:07 AM


Google News

பண்ருட்டி : பண்ருட்டி அருகே முந்திரி காட்டில் பெண் கழுத்தை கத்தியால் அறுத்து உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் வேலங்குப்பம் கிராமத்திலிருந்து ஒரு கி.மீ., தொலைவில் உள்ள ராமலிங்கம் என்பவரது முந்திரிதோப்பில் நேற்று தீயில் கருகிய நிலையில் 25 வயது மதிக்கத்தக்க பெண் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.



தகவலறிந்த காடாம்புலியூர் போலீசார் விரைந்து சென்று அப்பெண்ணை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சற்று நேரத்தில் அவர் இறந்தார். இறந்த பெண் யார்... எந்த ஊரைச் சேர்ந்தவர்...எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து இரண்டு தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு உடல்: சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பண்ருட்டி கெடிலம் ஆற்று பாலத்தின் கீழ் 40 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் ஒன்று கிடந்தது.

எஸ்.பி., பகலவன், ஏ.டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன், டி.எஸ்.பி., மணி உள்ளிட்டோர் விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தனர். உடல் அருகே கிடந்த மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு விசாரித்தில், இறந்தவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சின்னப்பன் மகன் பாபு, 35, என தெரியவந்தது. அவரது மாமியார் பண்ருட்டி அடுத்த ராயர்பாளையத்தைச் சேர்ந்த ராஜவேணி, உடலை அடையாளம் காட்டினார். இவ்விரு வழக்குகள் குறித்து காடாம்புலியூர் மற்றும் பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். அழுகிய நிலையில் பெண் உடல்: சிதம்பரம் அடுத்த சிதம்பரநாதன்பேட்டை கான்சாகிப் வாய்க்கால் கரை முட்புதரில் அழுகிய நிலையில் 45 வயது மதிக்கத்தக்க பெண் முகம் சிதைந்த நிலையில் உடல் கிடந்தது. இறந்து கிடந்தவர் யார்.. எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து கிள்ளை போலீசார் விசாரிக்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us