Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இ பிராண்ட் கல்வி கையேடு வெளியீடு

இ பிராண்ட் கல்வி கையேடு வெளியீடு

இ பிராண்ட் கல்வி கையேடு வெளியீடு

இ பிராண்ட் கல்வி கையேடு வெளியீடு

ADDED : ஜூலை 17, 2011 01:12 AM


Google News

கோவை : எஸ்.16 கிரியேடிவ் லேப்ஸ் நிறுவனம் சார்பில் 'இ பிராண்ட்' கல்வி கையேடு வெளியீட்டு விழா, அவிநாசி ரோட்டிலுள்ள ஜென்னீஸ் ரெசிடென்சி ஓட்டலில் நேற்று நடந்தது.

விழாவில், சூலூர், அனுகிரஹா மந்திர் பள்ளி இயக்குனர் ÷ஷாபா வரவேற்றார். வெங்கடேஸ்வரா கல்வி நிறுவன சேர்மன் வேலு தலைமை வகித்தார். நடிகர் பார்த்திபன் 'இ பிராண்ட்' கல்வி கையேடை வெளியிட்டு பேசுகையில் ''இன்றைய காலகட்டத்தில் பல்வேறு துறைகளின் வளர்ச்சியில் விளம்பரம் முக்கிய பங்கு வகிக்கிறது. நம் நாட்டின் கலாசாரத்தை பாதிக்காத வகையில் விளம்பரங்கள் வெளிவர வேண்டும். குழந்தைகள் படிப்பில் மட்டும் சிறந்து விளங்கினால் போதாது. நல்ல பண்புகள் மற்றும் மனகட்டுபாட்டை அதிகம் வளர்த்து கொள்ள வேண்டும், '' என்றார்.



எஸ்.16 கிரியேடிவ் லேப்ஸ் நிர்வாக இயக்குனர் விஜய்ஆனந்த் கூறியதாவது: எங்கள் நிறுவனத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, கல்வித்துறையில் ஒரு புதிய முயற்சியாக, பல தனித்துவமிக்க தகவல்களுடன், மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர், ஒருங்கிணைந்து பயன்பெறும் வகையில், அவர்கள் மனதில் ஏற்படும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில், 'இ பிராண்ட்' கல்வி கையேடு வடிவமைத்துள்ளோம். கால்ஸ் காலிபர் கல்வி நிறுவன இயக்குனர் ஜெயராஜ், பெங்களூரு ஐ.எஸ்.ஓ., 9001 கல்வி சேவை நிறுவன இயக்குனர் வாசுதேவன், ஆர்.ஆர்., கன்சல்டன்சி நிறுவன முதன்மை செயல் அதிகாரி நிர்மலா, கிராஸ்ரோட்ஸ் எச்.ஆர்., நிறுவன இயக்குனர் அருண்பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us