/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டம்அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டம்
அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டம்
அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டம்
அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டம்
ADDED : பிப் 10, 2024 04:41 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அ.தி.மு.க., தொண்டர்களின் உரிமை மீட்புக்குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் தர்மர் எம்.பி., தலைமை வகித்தார்.
இதில் பங்கேற்க வந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு கிழக்கு கடற்கரை சாலை துவங்கி மண்டபம் வரை பூரண கும்பம் மரியாதையுடன் நடன குதிரையாட்டம், பெண்கள் பூக்கள் துாவி வரவேற்றனர்.
கூட்டத்தில் பரமக்குடி தொகுதி செயலாளர் வக்கீல் நவநாதன், மாவட்ட பொருளாளர் பார்த்திபனுார் பாலசுப்பிரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தரசு, எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட இணை செயலாளர் பருத்தியூர் நடராஜன், நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் (வடக்கு) ரஜினிகாந்த். ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் வக்கீல் முத்து முருகன், போகலுார் ஒன்றிய செயலாளர் சுரேஷ், பரமக்குடி ஒன்றிய செயலாளர் லாடசெல்வம், மாவட்ட பேரவை செயலாளர் வாணியவல்லம் நாகநாதன், பரமக்குடி நகர் பேரவை செயலாளர் முனியாண்டி, பார்த்திபனுார் நகர் செயலாளர் வினோத் ஆகியோர் பங்கேற்றனர்.