ADDED : ஜூலை 17, 2011 01:16 AM
உடுமலை : உடுமலை அருகே கரட்டூரில், இந்து மக்கள் கட்சி (தமிழகம்), மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
மாவட்ட அமைப்பு செயலாளர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். விதிமீறி, அதிகளவு கால்நடைகளை கனரக வாகனங்கள் மூலமாக கொண்டு செல்லப்படுகின்றன. போலீசார் மற்றும் வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட அமைப்பாளர் சீனி, மாநில செய்தி தொடர்பாளர் வெங்கட்ரமணன், மாவட்ட செயலாளர் பொன்னுசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.