ADDED : பிப் 09, 2024 11:10 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் தை அமாவாசையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
நிகழ்ச்சியையொட்டி பெருமாள், தயார் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரம் நடந்தது.
தொடர்ந்து சுவாமி கோவில் உட்பிரகாரம் வலம் வந்து மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.