/உள்ளூர் செய்திகள்/கரூர்/விதிகளை மீறும் வாகனங்கள் கரூரில் விபத்து ஏற்படும் அபாயம்விதிகளை மீறும் வாகனங்கள் கரூரில் விபத்து ஏற்படும் அபாயம்
விதிகளை மீறும் வாகனங்கள் கரூரில் விபத்து ஏற்படும் அபாயம்
விதிகளை மீறும் வாகனங்கள் கரூரில் விபத்து ஏற்படும் அபாயம்
விதிகளை மீறும் வாகனங்கள் கரூரில் விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : பிப் 10, 2024 10:22 AM
கரூர்: கரூர்--திருச்சி பைபாஸ் சாலையில், வெங்ககல்பட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில், வாகன விதிகள் மீறுவோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரூர் -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வெங்ககல்பட்டி அருகே திண்டுக்கல் பகுதிக்கு வாகனங்கள் எளிதில் செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் இருபுறமும் நான்கு சர்வீஸ் சாலைகள் உள்ளன. கரூரில் இருந்து மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்குவதால், மேம்பாலத்தின் நுழைவு வாயில்களின் இரண்டு புறமும் மினி ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், பெரும்பாலான வாகன ஓட்டிகள் ரவுண்டானாவை சுற்றி செல்லாமல், நேரடியாக மேம்பாலத்தை நோக்கி பயணிப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, வாகன விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற தேவையான விழிப்புணர்வுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.