Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/2017க்குள் புறநகர் ரயில் திட்டம் முடிக்க இலக்கு ஜெர்மனி வங்கியுடன் ரூ.4,561 கோடி கடன் ஒப்பந்தம்

2017க்குள் புறநகர் ரயில் திட்டம் முடிக்க இலக்கு ஜெர்மனி வங்கியுடன் ரூ.4,561 கோடி கடன் ஒப்பந்தம்

2017க்குள் புறநகர் ரயில் திட்டம் முடிக்க இலக்கு ஜெர்மனி வங்கியுடன் ரூ.4,561 கோடி கடன் ஒப்பந்தம்

2017க்குள் புறநகர் ரயில் திட்டம் முடிக்க இலக்கு ஜெர்மனி வங்கியுடன் ரூ.4,561 கோடி கடன் ஒப்பந்தம்

ADDED : பிப் 10, 2024 06:26 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு: பெங்களூரு புறநகர் ரயில் திட்டத்துக்காக, ஜெர்மனி வங்கியிடம், கர்நாடக ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம், 4,561 கோடி ரூபாய் கடன் பெறவதற்கு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. இத்திட்டத்தை, 2027க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு நகரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்துடன், நகரை ஒட்டியுள்ள நகரங்களிலும் போக்குவரத்து நெரிசலை குறைத்து, பயணியருக்கு உதவும் வகையில், புறநகர் ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு மொத்தம், 15,767 கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது.

கே.எஸ்.ஆர்., பெங்களூரு - எலஹங்கா - தேவனஹள்ளி; பையப்பனஹள்ளி ரயில்வே முனையம் - சிக்கபானவாரா; கெங்கேரி - ஒயிட்பீல்டு; ஹீலலிகே -ராஜனகுன்டே ஆகிய நான்கு வழித்தடங்களில் புறநகர் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.

இதில், ஒரு சில இடங்களில் மட்டுமே முதல் கட்ட பணிகள் நடந்து வருகின்றன. அரசிடம் போதுமான நிதியில்லாததால், பணிகள் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தை கர்நாடக அரசின், கே.ரைட் எனும் கர்நாடக ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் மேற்கொள்கிறது.

இதற்கிடையில், ஜெர்மனியின் லக்சம்பர்க் நகரின் கே.எப்.டபிள்யூ., டெவலப்மென்ட் வங்கியிடம் 4,561 கோடி ரூபாய் கடன் வாங்க முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக, மாநில நகர உள்கட்டமைப்பு மேம்பாட்டு துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், பெங்களூரில் உள்ள ஜெர்மனி துாதர் அகிம் பகார்ட் ஆகியோர் முன்னிலையில், பெங்., விதான் சவுதாவில், நேற்று கடனுக்கான உடன்படிக்கை போடப்பட்டது.

பின், அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறியதாவது:

பெங்., புறநகர் ரயில் திட்டத்துக்கு, மத்திய, மாநில அரசுகள் தலா 20 சதவீத நிதியும், மீதி பணம் கடன் மூலம் பெறப்படுகின்றன. ஜெர்மனி வங்கியிடம், ஆண்டுக்கு 4 சதவீத வட்டி வீதத்தில், 4,561 கோடி ரூபாய் கடன் பெறப்படுகிறது.

இந்த நிதி, கெங்கேரி - ஒயிட்பீல்டு வழித்தடத்துக்கு பயன்படுத்தப்படும். சர்வதேச அளவில் பெங்களூரு நகருக்கு தனி செல்வாக்கு உண்டு. நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பது தான் அரசின் நோக்கம்.

இதற்காக, குறிப்பிட்ட கால கட்டத்துக்குள் புறநகர் ரயில் திட்டத்தை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். முழு திட்டத்தையும், 2027 டிசம்பருக்குள் முடிப்பதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us