/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தோல்விகள்தான் வெற்றியின் படிக்கட்டுகள் : பல்கலை பதிவாளர் பேச்சுதோல்விகள்தான் வெற்றியின் படிக்கட்டுகள் : பல்கலை பதிவாளர் பேச்சு
தோல்விகள்தான் வெற்றியின் படிக்கட்டுகள் : பல்கலை பதிவாளர் பேச்சு
தோல்விகள்தான் வெற்றியின் படிக்கட்டுகள் : பல்கலை பதிவாளர் பேச்சு
தோல்விகள்தான் வெற்றியின் படிக்கட்டுகள் : பல்கலை பதிவாளர் பேச்சு
கோவை : ''தோல்விகள்தான் வெற்றியின் படிக்கட்டுகள்; அதிலிருந்தே வெற்றிக்கான தகவல்களை நீங்கள் கற்றுக்கொள்ளலாம்'' என, பாரதியார் பல்கலை பதிவாளர் திருமால்வளவன் தெரிவித்தார்.
நிகழ்கால தகவல் தொழில்நுட்ப உலகம் தினமும் புதிய மாற்றங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. படித்து முடித்து வெளியில் செல்வோருக்கு அதில் எண்ணற்ற சவால்கள் காத்திருக்கின்றன. அதை சமாளிக்க சுயதிறனை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும். தோல்விகள்தான் வெற்றியின் படிக்கட்டுகள்; அதிலிருந்தே வெற்றிக்கான தகவல்களை நீங்கள் கற்றுக்கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார். மூன்று வருட பாடத்தில் 85 சதவீதம் பெற்று, கல்லூரியில் முதலாவதாக வந்த மாணவி ஆண்டனி பாஸ்டினாவிற்கு வெள்ளிப் பதக்கம் அணிவிக்கப்பட்டது. இதில், கோவை சி.எஸ்.ஐ., அமைப்பின் தலைவர் கருணாகரன், கல்லூரி முதல்வர் பியூலா ஜெயசீலி, செயலாளர் சுசீலா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.