ADDED : பிப் 09, 2024 11:07 PM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
அதனையொட்டி, நேற்று காலை அங்காளம் மனுக்கும், பெரியாயி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
இரவு 11:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்திருந்தனர்.