/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/தற்கொலை முயற்சி மனைவி பலி கணவர் மீட்புதற்கொலை முயற்சி மனைவி பலி கணவர் மீட்பு
தற்கொலை முயற்சி மனைவி பலி கணவர் மீட்பு
தற்கொலை முயற்சி மனைவி பலி கணவர் மீட்பு
தற்கொலை முயற்சி மனைவி பலி கணவர் மீட்பு
ADDED : பிப் 09, 2024 10:37 PM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த மருவூர் அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் சண்முகம், 68. இவரின் மனைவி கன்னியம்மா, 65.
கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டிருந்த தம்பதி, நேற்று மருவூர் அவென்யூ பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அச்சிறுபாக்கம் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார், கிணற்றிலிருந்து சடலமாக கன்னியம்மா உடலை கைப்பற்றினர்.
சண்முகத்தை உயிருடன் மீட்டு, மேல்மருவத்துார் தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சைக்கு அனுமதித்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.