Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பி.ஏ.பி., பாசன நீர் திருட்டு நடப்பது உண்மை; சட்டசபை மதிப்பீட்டு குழு அதிருப்தி

பி.ஏ.பி., பாசன நீர் திருட்டு நடப்பது உண்மை; சட்டசபை மதிப்பீட்டு குழு அதிருப்தி

பி.ஏ.பி., பாசன நீர் திருட்டு நடப்பது உண்மை; சட்டசபை மதிப்பீட்டு குழு அதிருப்தி

பி.ஏ.பி., பாசன நீர் திருட்டு நடப்பது உண்மை; சட்டசபை மதிப்பீட்டு குழு அதிருப்தி

ADDED : பிப் 09, 2024 11:49 PM


Google News
உடுமலை;பி.ஏ.பி., தண்ணீர் திருட்டு தொடர்பாக, சட்டசபை மதிப்பீட்டு குழு எழுப்பிய கேள்விகளுக்கு அதிகாரிகள் 'மழுப்பல்' பதில் அளித்ததால், தண்ணீர் திருட்டு குறித்த விவசாயிகளின் புகார்கள் உண்மை என்பது நிரூபணமாகிறது, என குழுவினர் அதிருப்தி தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில், கும்பகோணம் எம்.எல்.ஏ., அன்பழகன் தலைமையில், எல்.எல்.ஏ., க்கள் சிந்தனைச்செல்வன், பரந்தாமன், ராமச்சந்திரன், காந்திராஜன், செல்லுார் ராஜூ ஆகிய மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டத்தில், 'பி.ஏ.பி., தண்ணீர் திருட்டு நடப்பதாக புகார் எழுகிறது; தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்', என, குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

பி.ஏ.பி., செயற்பொறியாளர் காஞ்சிதுரை, ''பி.ஏ.பி., பிரதான கால்வாய், திருமூர்த்தி அணையிலிருந்து வெள்ளகோவில் வரை செல்கிறது. திறந்த வெளி கால்வாய்; கால்வாயின் இருபுறமும் பாசன பகுதிகள் உள்ளன.

சிலர், குழாய் அமைத்து, வாய்க்காலில் இருந்து தண்ணீர் திருடுகின்றனர். திருட்டை தடுக்க கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும்போது, குழு ரோந்து சென்று, திருடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது,'' என்றார்.

'தண்ணீர் திருட்டு சம்பந்தமாக, இதுவரை எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்கிற, குழு உறுப்பினர்கள் கேள்விக்கு, அதிகாரியால் பதில் சொல்லமுடியவில்லை.

டென்ஷனான குழுவினர், 'பி.ஏ.பி.,ல் தண்ணீர் திருட்டை நடப்பதை நீங்கள் சரிவர கண்காணிக்கவில்லை; தண்ணீர் திருட்டு தொடர்பாக விவசாயிகள் கூறும் புகார்கள் உண்மை என்பது நிரூபணமாகிறது,' என்றனர்.

அதே போல், திருப்பூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்த சிவப்பு மண்டலம் உள்ளதா போன்ற, மதிப்பீட்டக்குழுவின் பல்வேறு கேள்விகளுக்கு, அதிகாரிகளிடம் முழுமையான புள்ளி விவரங்கள் இல்லை. பொத்தாம் பொதுவாக, சராசரி புள்ளி விவரங்களையே தெரிவித்தனர்.

மதிப்பீட்டுக்குழுவின் ஆய்வுக்கூட்டத்துக்கு வரும்போது, தெளிவான புள்ளி விபரங்களை கைவசம் வைத்திருக்கவேண்டும் என்பது கூட தெரியாதா என, அதிகாரிகளை, குழு உறுப்பினர்கள் கடிந்துகொண்டனர்.

அதே போல், அமராவதி ஆற்றின் குறுக்கே, 100 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டுவது உட்பட பல்வேறு பணிகளுக்காக, ஆய்வுக்குழுவினரிடம் நிதி கோரப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us