செயற்கை நுண்ணறிவு மாபெரும் புரட்சிக்கு தயாராகி வருகிறது

UPDATED : பிப் 09, 2024 12:00 AM
ADDED : பிப் 10, 2024 08:45 AM
சென்னை:
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், பன்னாட்டு கணித்தமிழ் மூன்று நாள் மாநாடு பிப்., 8ல் துவங்கியது. மாநாட்டை துவக்கி வைத்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:
கணினி தொழில்நுட்பம் என்பதை கடந்து, அதன் மற்றொரு எல்லையை நாம் தொட்டிருக்கிறோம். ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு வாயிலாக, கல்வி துறையில் பெரும் மாற்றம் வரலாம்; மருத்துவம், தொழிற்சாலைகளுக்கும், இது வரமாக அமையும்.இந்த தொழில்நுட்பத்தில், மொழியின் பங்கு முக்கியம். அதன் வாயிலாகவே, இந்த நுண்ணறிவை நாம் பயன்படுத்தி பயன்பெற போகிறோம். அந்தத் தேவைகளுக்கு ஏற்ற வகையில், நம்மையும், நம் மொழியையும் தயார்படுத்தும் நோக்கில், இந்த மாநாடு நடத்தப்படுகிறது.இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ள கருத்துக்கள் தான், ஏ.ஐ., யுகத்தில் தமிழின் திசையை தீர்மானிக்க போகின்றன. செயற்கை நுண்ணறிவானது மாபெரும் புரட்சிக்கும், பெரும் பாய்ச்சலுக்கும் தன்னைத் தயார்படுத்தி வருகிறது.உலகெங்கிலும் ஏ.ஐ., பற்றி வரும் தகவல்கள், நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத செயல்களை எல்லாம், எதிர்காலத்தில் சாதித்துக் காட்டும் என்று கூறப்படுகிறது. அப்படி அந்தத் தொழில்நுட்பம் வளரும்போது, தமிழ் மொழியில், அதற்கான தரவுகள் கிடைக்கும் போது, நமக்கு அதனால் பயன் அதிகமாக கிடைக்கும்.இது, தரவுகளின் காலம். இங்கே எவ்வளவுக்கு எவ்வளவு தரவு உள்ளதோ; அவ்வளவுக்கு அவ்வளவு அந்த மொழி முன்வரிசைக்கு செல்லும். அதற்கு நாம் அனைவரும் உழைக்க வேண்டும்.தமிழ் மொழியின் கடந்த கால பெருமைகளைப் பேசி, நாம் ஓய்ந்துபோய்விடக் கூடாது. காலத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடுவதற்கான ஆற்றலை, தமிழ் மொழியிடமிருந்து பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.