/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/அரூரில் சாலை விதிகளை கடைபிடிக்க உறுதிமொழிஅரூரில் சாலை விதிகளை கடைபிடிக்க உறுதிமொழி
அரூரில் சாலை விதிகளை கடைபிடிக்க உறுதிமொழி
அரூரில் சாலை விதிகளை கடைபிடிக்க உறுதிமொழி
அரூரில் சாலை விதிகளை கடைபிடிக்க உறுதிமொழி
ADDED : பிப் 10, 2024 07:57 AM
அரூர் : தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், அரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் மங்கையற்கரசி தலைமை வகித்தார்.
அரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் காமராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன், டிராபிக் இன்ஸ்பெக்டர் வைகுண்டவாசகம் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு சாலைவிதிகளை கடைபிடிப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தி பேசினர். பின், அனைவரும் சாலை விதிகளை கடைபிடிக்க, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து, கல்லுாரி வளாத்தில் துவங்கிய விழிப்புணர்வு பேரணியை, முதல்வர் மங்கையற்கரசி கொடியசைத்து துவக்கி வைத்தார். அரூர் கச்சேரிமேடு வரை சென்ற பேரணி, மீண்டும் கல்லுாரி வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் மாணவ, மாணவியர் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.