'அணை கட்டியிருந்தால் மோடிக்கு நான் அடிமை'
'அணை கட்டியிருந்தால் மோடிக்கு நான் அடிமை'
'அணை கட்டியிருந்தால் மோடிக்கு நான் அடிமை'
ADDED : பிப் 10, 2024 11:32 PM

மாண்டியா : ''நரேந்திர மோடி ஆட்சியில் ஒரு நீர்த்தேக்கத்தையாவது கட்டினால் அவருக்கு நான் இருக்கிறேன்,'' என காங்கிரஸ் எம்.எல்.ஏ., நரேந்திரசாமி தெரிவித்தார்.
மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
காங்கிரஸ் அரசின் வாக்குறுதித் திட்டத்தை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடியே எங்களின் வாக்குறுதித் திட்டத்தால், மாநில கஜானா திவாலாகிவிடும் என்று கூறியுள்ளார்.
வீட்டுக்கு 2,000 ரூபாய் கொடுக்கின்றனர். இதனால் அரசின் கஜானா திவாலாகிவிடும் என்று கூச்சலிட்டனர். ஓட்டுக்காக அரசியல் செய்யவில்லை. மக்களை மேம்படுத்துவதே எங்கள் திட்டம்.
லோக்சபா தேர்தலின்போது, சில கட்சிகளின் தலைவர்கள் ஜாதி, மதத்தின் பெயரில் ஓட்டு கேட்க வருகின்றனர். நாட்டில் மதிப்புமிக்க மற்றும் முக்கியமான நீர்த்தேக்கங்களையும், தொழிற்சாலைகளையும் கட்டியது காங்கிரஸ் அரசு தான், மோடியல்ல.
நம் நாட்டை மோடி வளர்க்கவில்லை. பிரதமர் மோடி, பத்து ஆண்டுகளில் நாட்டிற்காக ஒரு அணையாவது கட்டியிருக்கிறாரா என்று சொல்லுங்கள்; அப்படி கட்டியிருந்தால், நான் அவருக்கு அடிமையாக இருப்பேன்.
நாங்கள் வாக்குறுதி கொடுத்தது தவறா? முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் மக்கள் நிலத்திட்டங்களை வழங்கி வருகிறார்.
சுதந்திரத்துக்கு முன்பு நம் நாடு எப்படி இருந்தது; இப்போது வளர்ச்சி எப்படி உள்ளது.
நரேந்திர மோடி அரசியலுக்கு வருவதற்கு முன்பு, பா.ஜ., தலைவர் வாஜ்பாய், இந்திராவை 'துர்கா தேவி'யுடன் ஒப்பிட்டார். இந்திராவால், வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.