/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது
வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது
வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது
வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது
ADDED : பிப் 09, 2024 11:09 PM

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் அடுத்த கூகையூரைச் சேர்ந்தவர் புஷ்பா, 50; இவர் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு எதிர் வீட்டில் 'டிவி' பார்த்துள்ளார். இரவு 10:00 மணியளவில் மர்ம நபர் ஒருவர் புஷ்பா வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றார்.
உடன் அப்பகுதி மக்கள் அவரை பிடித்து கீழ்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் சங்கராபுரம் அடுத்த பாவளம் கிராமத்தைச் சேர்ந்த குமரவேல், 46; என தெரிந்தது.
புஷ்பா கொடுத்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து குமரவேலை கைது செய்தனர்.