/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கொத்தடிமை தினத்தை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு மார்க்சிஸ்ட் கோரிக்கைகொத்தடிமை தினத்தை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு மார்க்சிஸ்ட் கோரிக்கை
கொத்தடிமை தினத்தை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு மார்க்சிஸ்ட் கோரிக்கை
கொத்தடிமை தினத்தை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு மார்க்சிஸ்ட் கோரிக்கை
கொத்தடிமை தினத்தை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு மார்க்சிஸ்ட் கோரிக்கை
ADDED : பிப் 10, 2024 04:29 AM

வாலிநோக்கம்: கொத்தடிமை தொழிலாளர் முறையை முழுவதுமாக அகற்றவும், கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்கவும் ஒவ்வொரு ஆண்டும் பிப்.9ல் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு முறை தினம் கடைபிடிக்கப்படுகிறது. சிக்கலை சேர்ந்த சி.பி.எம்., மாவட்ட குழு உறுப்பினர் போஸ் கூறியதாவது:
வாலிநோக்கத்தில் தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனம் செயல்படுகிறது. இங்கு அரசு மற்றும் தனியார் உப்பளங்கள் நான்கு எண்ணிக்கையில் உள்ளன. சேரந்தை, சேனங்குறிச்சி, கிருஷ்ணாபுரம், திருவரங்கை, குசவன்குளம், காவாக்குளம், மேலக்கிடாரம், கீழக்கிடாரம், வாலிநோக்கம், மாரியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து கூலி தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் இங்கு வேலை செய்கின்றனர்.
அரசு உப்பளங்களில் காலை 6:00 முதல் 11:00 மணி வரை உப்பு எடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். அதே வேளை தனியார் உப்பளங்களில் காலை 7:30 மணி முதல் மதியம் 3:00 மணி வரை தொடர் வெயிலில் பணி செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
குறைந்த ஊதியம், உழைப்பு அதிகம் என்ற நிலையில் கூலி தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.
வட மாநில தொழிலாளர்கள் இதே நிலையில் உள்ளனர். அரசு இந்த கொத்தடிமை நிலையை ஒழிக்க வேண்டும். உப்பளம், ஓட்டல்கள், செங்கல் சூளை, வீட்டு வேலை, தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளில் அரசு நிர்ணயித்த நேரத்தில் வேலை செய்ய வேண்டும்.
கொத்தடிமை ஒழிப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசு நடத்த வேண்டும். இதன் மூலம் தொழிலாளர்களின் உடல் நிலையும் மன நிலையும் சோர்வின்றி வேலை செய்வதற்கு வசதியாக இருக்கும். மார்க்சிஸ்ட் சார்பில் கொத்தடிமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விளக்கி வருகிறோம் என்றார்.