விஜயேந்திரா - எத்னால் சமாதானம் பிரஹலாத் ஜோஷி முயற்சி வெற்றி
விஜயேந்திரா - எத்னால் சமாதானம் பிரஹலாத் ஜோஷி முயற்சி வெற்றி
விஜயேந்திரா - எத்னால் சமாதானம் பிரஹலாத் ஜோஷி முயற்சி வெற்றி
ADDED : பிப் 10, 2024 06:17 AM

கர்நாடக மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, மூத்த எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் ஆகியோரிடையே இருந்த அதிருப்தியை, மத்திய பார்லிமென்ட் விவகார துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தீர்த்து வைத்தார்.
முந்தைய பா.ஜ., ஆட்சி காலத்தில், தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி வழங்கவில்லை என்று அப்போதைய முதல்வர் எடியூரப்பா மீது, விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் குற்றஞ்சாட்டினார்.
அதன் பின், அடிக்கடி அவரையும், அவரது மகன் விஜயேந்திராவையும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார். கட்சி மேலிடம் எச்சரித்தும், எதையும் பொருட்படுத்தாமல் பகிரங்கமாக பேசி வந்தார்.
மாநில தலைவர் பதவியை, விஜயேந்திராவுக்கு வழங்கியதால், மேலும் கடுப்பானார்.
இதற்கிடையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு, தேசிய தலைவர்களின் அழைப்பின் பேரில், எத்னால் புதுடில்லி சென்று வந்தார்.
அதன் பின், எடியூரப்பா குடும்பத்தை விமர்சனம் செய்வதை விட்டு, நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவது மட்டுமே தன் நோக்கம் என்று கூறி வந்தார்.
இந்நிலையில், புதுடில்லியில் உள்ள மத்திய பார்லிமென்ட் விவகார துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி வீட்டில், எத்னால், எம்.பி.,க்கள் பி.சி.மோகன், கத்திகவுடர், முன்னாள் எம்.பி., பி.வி.நாயக், எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளி நேற்று ஆலோசனை நடத்தினர்.
இதே வேளையில், ஜோஷி அழைப்பின் பேரில், விஜயேந்திராவும் சென்றார். எத்னால் வேறு பக்கம் முகம் திருப்பிக் கொண்டிருந்தார். அப்போது, இருவரிடமும் ஜோஷி சமாதானம் செய்து வைத்தார்.
முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன்பு, எத்னாலின் ஆலோசனை பெறும்படி, விஜயேந்திராவுக்கு அறிவுரை கூறினார். இதன் மூலம், நான்கு ஆண்டுகளின் அதிருப்தி முடிவுக்கு வந்தது.
சிறிது நேரம் கழித்து, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா வீட்டுக்கு சென்ற விஜயேந்திரா, கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார் நமது நிருபர் -.