/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/தை அமாவாசையை முன்னிட்டு முன்னோருக்கு தர்ப்பணம்தை அமாவாசையை முன்னிட்டு முன்னோருக்கு தர்ப்பணம்
தை அமாவாசையை முன்னிட்டு முன்னோருக்கு தர்ப்பணம்
தை அமாவாசையை முன்னிட்டு முன்னோருக்கு தர்ப்பணம்
தை அமாவாசையை முன்னிட்டு முன்னோருக்கு தர்ப்பணம்
ADDED : பிப் 09, 2024 09:37 PM

திருவள்ளூர்:திருவள்ளூர் வீரராகவர் கோவில், தை பிரம்மோற்சவம், கடந்த, 4ல் துவங்கி, நடந்து வருகிறது. ஐந்தாவது நாளான நேற்று, தை அமாவாசை தரிசனம் நடந்தது. இதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதி மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள், நேற்று முன்தினம் இரவே, கோவில் வளாகத்தில் கூடினர்.
கோவில் வளாகத்தில் தங்கி, நேற்று காலை, ஹிருதாபநாசினி குளக்கரையில், தங்கள் முன்னோருக்கு, தர்ப்பணம் செய்தனர். பின், நீண்ட வரிசையில் காத்திருந்து, வீரராகவரை தரிசனம் செய்தனர்.
தை அமாவாசையை முன்னிட்டு, நேற்று காலை, 5:00 மணிக்கு, ரத்னாங்கி சேவை நடந்தது. இரவு யாளி வாகனத்தில், பூதேவி, ஸ்ரீதேவி சமேத உற்சவர் வீரராகவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான, தேரோட்டம், இன்று காலை 7:00 மணியளவில் நடக்கிறது.
தை அமாவாசையை ஒட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்
திருத்தணி:ஆண்டுதோறும் தை மாதத்தில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுகின்றனர். அந்த வகையில் திருத்தணி நகரத்தில் சரவணபொய்கை என்கிற திருக்குளம், சதாசிவ லிங்கேஸ்வரர் கோவில் குளம் மற்றும் நல்லாங்குளம் ஆகிய இடங்களில் தை அமாவாசையை ஒட்டி நுாற்றுக்கணக்கான மக்கள் வந்திருந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வீடுகளில் படையல் போட்டு வழிபட்டனர்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மக்கள் கூட்டம் அதிகளவில் வந்ததால், 50க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் வந்திருந்து, கலசம் வைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இதே போல், திருத்தணி தாலுகா முழுவதும் தை அமாவாசையை ஒட்டி மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தும், வீடுகளில் பூஜைகள் செய்தும் வழிபட்டனர்.