அ.தி.மு.க.,வினருக்கு துரோகம் செய்த இ.பி.எஸ்.,; பன்னீர்செல்வம் ஆவேசம்
அ.தி.மு.க.,வினருக்கு துரோகம் செய்த இ.பி.எஸ்.,; பன்னீர்செல்வம் ஆவேசம்
அ.தி.மு.க.,வினருக்கு துரோகம் செய்த இ.பி.எஸ்.,; பன்னீர்செல்வம் ஆவேசம்
ADDED : பிப் 10, 2024 02:58 AM

ராமநாதபுரம்: ''அ.தி.மு.க., தொண்டர்களுக்கு துரோகம் செய்த பழனிசாமி தனது பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் ''என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேசினார்.
ராமநாதபுரத்தில் நடந்த அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டத்தில் பன்னீர்செல்வம் பேசியதாவது:
அ.தி.மு.க.,வில் தவறான வரலாறை பழனிசாமி உருவாக்கியுள்ளார். இதனால் கட்சி பல்வேறு சிக்கலில் உள்ளது. தொண்டர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. அதை மீறி அவர்களுக்கு துரோகம் செய்து பொதுச்செயலாளர் எனக்கூறும் பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இல்லையெனில் தொண்டர்களுடன் அவரைவிரட்டுவோம். எந்த தியாகமும் செய்யாமல் நான் தான் பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் என பழனிசாமி பதவி வெறி பிடித்துள்ளார். அவர் கட்சிபொறுப்பிற்கு வந்தது முதல் ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை.
கட்சிக் கொடி, சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் கூறியபடிசிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெறுவோம். லோக்சபா தேர்தலில் சிறப்பாக செயல்பட பூத்கமிட்டி அமைக்கப்படுகிறது. நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தலை சந்திக்க தயாராக வேண்டும் என்றார்.
பா.ஜ., கூட்டணியில் உள்ளோம்
அதன் பின் நிருபர்களிடம் கூறியதாவது:
முன்னாள் அமைச்சர் உதயகுமார் விமர்சனம் குறித்து கேட்டபோது ''அவர் பதவிக்காக சித்தபிரம்மை பிடித்து அலைகிறார். தமிழகத்தில் உண்மையான எதிர்க் கட்சியாக தொண்டர்களுடன் நாங்கள் செயல்படுகிறோம். தினமும் அறிக்கை வெளியிடுகிறோம். பழனிசாமி அது பற்றி கவலைப்படுவது இல்லை. அவருக்கு எல்லாபதவியும் வேண்டும். நாங்கள் பா.ஜ., கூட்டணியில் தான் உள்ளோம். பழனிசாமி தான் வெளியே போய்விட்டார். அ.தி.மு.க., பிரிந்துள்ளதால் தி.மு.க., எளிதாக வெற்றி பெற வாய்ப்புள்ளதா என கேட்ட போது, ''நாங்கள் பிரியவில்லை. இதற்கு காரணமான பழனிசாமியிடம் கேளுங்கள். அ.தி.மு.க., இணைந்து செயல்படுவது போல் எதுவும் தெரியவில்லை ''என்றார்.
ராமநாதபுரம் மாவட்டசெயலாளர் எம்.பி., தர்மர், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி, இணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ்பாண்டியன் உடனிருந்தனர்.