கைத்தறி துணிகள் கண்காட்சி; ரூ.40 கோடிக்கு விற்பனை
கைத்தறி துணிகள் கண்காட்சி; ரூ.40 கோடிக்கு விற்பனை
கைத்தறி துணிகள் கண்காட்சி; ரூ.40 கோடிக்கு விற்பனை
UPDATED : பிப் 10, 2024 06:47 AM
ADDED : பிப் 10, 2024 12:07 AM

சென்னை:கைத்தறி துணிநுால் துறை சார்பில், சென்னையில் நேற்று நடந்த வாங்குதல் மற்றும் விற்பனை கண்காட்சியில், 40 கோடி ரூபாய்க்கு கைத்தறி துணிகளை விற்பனை செய்ய, ஒப்பந்தம் செய்யப்பட்டது.
சென்னை தேனாம்பேட்டையில், கைத்தறி மற்றும் துணிநுால் துறை சார்பில், வாங்குவோர் - விற்பனையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதை, துறை அமைச்சர் காந்தி துவக்கி வைத்து, அதற்கான கையேட்டை வெளியிட்டு, இணைய தளத்தையும் துவக்கி வைத்தார்.
பின், அவர் பேசியதாவது:
கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், டில்லி ஆகிய நகரங்களில், தலா 50 லட்சம் ரூபாய் செலவில், வாங்குவோர் - விற்பனையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.
அதன் முதல் நிகழ்ச்சி, இன்றும், நாளையும் நடக்கிறது.
இதில், 10 அரங்குகள் அமைக்கப்பட்டு, புதிய கைத்தறி ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன; 282 ஜவுளி வர்த்தகர்கள் பங்கேற்றுள்ளனர். வாங்குவோர், விற்பனையாளர்களிடையே ஒப்பந்தம் செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாலையில், பல்வேறு நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், 40 கோடி ரூபாய்க்கு, உற்பத்தியாளர்களிடம் இருந்து கைத்தறி ஜவுளிகளை வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.