/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் 34 பேருக்கு தாலிக்கு தங்கம்மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் 34 பேருக்கு தாலிக்கு தங்கம்
மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் 34 பேருக்கு தாலிக்கு தங்கம்
மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் 34 பேருக்கு தாலிக்கு தங்கம்
மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் 34 பேருக்கு தாலிக்கு தங்கம்
ADDED : பிப் 10, 2024 04:50 AM

சிவகங்கை: சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகள் 34 பேருக்கு ரூ.8 லட்சம் திருமண உதவித்தொகை, தலா ஒரு பவுன் தாலிக்கு தங்கத்தை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் உலக நாதன் வரவேற்றார். உதவி கமிஷனர் (ஆயத்தீர்வை) ரங்கராஜன் முன்னிலை வகித்தார். மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை கலெக்டர் பெற்று, உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தார்.
பின்னர் மாற்றுத்திறனாளிகள் 60 பேருக்கு இலவச தையல் இயந்திரம், காதொலி கருவி உட்பட ரூ.4 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார். மாற்றுத்திறனாளி பெண்கள் 34 பேருக்கு தலா ஒரு பவுன் வீதம் தாலிக்கு தங்கம் வழங்கினார். இவர்களுக்கான திருமண உதவி தொகையாக ஒதுக்கிய ரூ.8 லட்சம் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.