/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஊராட்சி நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு மரக்கன்றுஊராட்சி நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு மரக்கன்று
ஊராட்சி நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு மரக்கன்று
ஊராட்சி நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு மரக்கன்று
ஊராட்சி நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு மரக்கன்று
ADDED : பிப் 09, 2024 11:40 PM

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, கோதவாடியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஊராட்சி சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
கிணத்துக்கடவு, கோதவாடி ஊராட்சி, அரசு நடுநிலைப்பள்ளியில், 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஆறு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே மரம் வளர்ப்பதை ஊக்குவிக்க, ஊராட்சி மற்றும் பள்ளி நிர்வாகம் இணைந்து, மா, பப்பாளி, கொய்யா, நெல்லி போன்ற பழ வகை மரக்கன்றுகள் மற்றும் புங்கன், அரச மர மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.
மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பயன்கள் பற்றி மாணவர்களிடையே விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன், ஊராட்சி தலைவர் ரத்தினசாமி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.