ADDED : பிப் 09, 2024 11:28 PM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், சித்தலம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் ராமநாதன் வரவேற்றார். மூத்த வழக்கறிஞர்கள் பாஸ்கர், நடராஜன், விக்கிரவாண்டி வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர், மாவட்ட உரிமையியல் நீதித்துறை நடுவர் சத்தியநாராயணன், கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் நடராஜ் ஆகியோர் சட்ட கருத்துரை வழங்கினர். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி பூர்ணிமா தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர், மாணவ, மாணவிகள் இந்த சட்ட விழிப்புணர்வு முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சரியான வழியில், சரியான முறையில் படித்து, கலெக்டராகவும், நீதிபதிகளாகவும், அறிவியல் அறிஞர்களாகவும், பலதுறை வல்லுனர்களாகவும் வரவேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், போதைப் பழக்கம் மற்றும் போதை விழிப்புணர்வு தொடர்பான விழிப்புணர்வு பாடல் பாடப்பட்டது.
முதன்மை சார்பு நீதிபதி ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.