மாநில பள்ளி கூடை, கால்பந்து போட்டி
மாநில பள்ளி கூடை, கால்பந்து போட்டி
மாநில பள்ளி கூடை, கால்பந்து போட்டி
ADDED : பிப் 10, 2024 04:59 AM
திருப்புத்துார்: திருமயம் லேனா விலக்கு மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் மூன்றாவது மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியருக்கான குடியரசு தின கால்பந்து, கூடைப்பந்து போட்டிகள் நடந்தன.
மாணவர்களுக்கான கால்பந்து இறுதி போட்டிக்கு தஞ்சாவூர் அணியும், சென்னை அணியும் தகுதி பெற்றன. இறுதிப்போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி தஞ்சாவூர் மாவட்ட அணி கோப்பையை வென்றது. மதுரை அணி மூன்றாம் இடத்தை பெற்றது.
கூடைப்பந்து இறுதி போட்டிக்கு மதுரை அணியும், தூத்துக்குடி அணியும் தகுதி பெற்றன. மதுரை அணியை வீழ்த்தி தூத்துக்குடி மாவட்ட அணி கோப்பையை வென்றது.
திருச்சி அணி மூன்றாம் இடத்தை பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு மவுண்ட் சீயோன் கல்வி நிறுவனங்களின் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபரதன் கோப்பை வழங்கினார்.
இயக்குனர் ஜெய்சன் கே. ஜெயபரதன், கல்வி ஒருங்கிணைப்பாளர் விவியன் ரேச்சல் ஜெய்சன் மற்றும் முதல்வர் பாலமுருகன் பங்கேற்றனர்.
ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பாளர் திவ்ய பிரசாத் மற்றும் உடற்கல்வி இயக்குனர் செல்வக்கண்ணன் செய்தனர்.