/உள்ளூர் செய்திகள்/கரூர்/மருந்தாளுனர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்மருந்தாளுனர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
மருந்தாளுனர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
மருந்தாளுனர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
மருந்தாளுனர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 10, 2024 10:21 AM
கரூர்: தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முன், மாவட்ட தலைவர் பிரேம் குமார் தலைமையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலியாக உள்ள, 1,400க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முன்னாள் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் சக்தி வேல், பொருளாளர் ஞானபாரதி உள்பட பலர் பங்கேற்றனர்.