/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சிறப்பு பஸ்கள் இயக்கம்: அதிகாரிகள் தகவல்சிறப்பு பஸ்கள் இயக்கம்: அதிகாரிகள் தகவல்
சிறப்பு பஸ்கள் இயக்கம்: அதிகாரிகள் தகவல்
சிறப்பு பஸ்கள் இயக்கம்: அதிகாரிகள் தகவல்
சிறப்பு பஸ்கள் இயக்கம்: அதிகாரிகள் தகவல்
ADDED : பிப் 09, 2024 11:37 PM
- நமது நிருபர் -
திருப்பூரில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, இன்றும், நாளையும் 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுமென போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து, 20 பஸ்கள், மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, பத்து பஸ்கள், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, பத்து பஸ்கள் என மொத்தம், 40 பஸ்கள் கூட்ட நெரிசலுக்கு ஏற்ப இயக்கப்படும்.
' கடந்த வாரம் (பிப்., 2, 3, 4 ம் தேதி) சிறப்பு பஸ் இயக்கிய போது, பயணிகள் கூட்டமில்லை. குறைந்தளவு பஸ்களுடன் இயக்கம் நிறுத்தப்பட்டு விட்டது.
நாளை (11ம் தேதி) தைமுகூர்த்தம் என்பதால், நடப்பு வாரம் வழக்கத்தை விட, கூட்டம் சற்று அதிகமாக இருக்குமென எதிர்பார்க்கிறோம்,' என, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.